News January 23, 2025
BOOMER UNCLE: ஸ்ரீதர் வேம்புவை விளாசிய டாக்டர்!

பசுவின் கோமியம் நல்லது எனக் கூறிய சென்னை ஐஐடி இயக்குநர் காமக்கோடிக்கு ஆதரவாக ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதனை பிரபல கல்லீரல் டாக்டரான சிரியாக் அபி பிலிப்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏய்.. பூமர் அங்கிள்.. எத்தனை நாட்களுக்குத்தான் உங்களை ஃபாலோ செய்பவர்களை தவறாக வழிநடத்தி, உங்களை நீங்களே முட்டாளாக்கி கொள்வீர்கள்? என தனது பதிவில் அவர் சாடியுள்ளார்.
Similar News
News November 29, 2025
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

7 கிமீ., வேகத்தில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல், சென்னையில் இருந்து 450 கிமீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதனால், சென்னை, காஞ்சி, குமரி, மதுரை, நாகை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், காலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 29, 2025
பாலய்யாவுக்கு பதில் விஜய் சேதுபதியா?

‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதேநேரம், இப்படத்தில் பாலய்யா கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாலய்யா படத்தில் இருந்து விலகியதாகவும், அந்த ரோலில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஷூட்டிங் 2026, பிப்ரவரியில் முடிவடைந்து, சம்மரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாரெல்லாம் வெயிட்டிங்?
News November 29, 2025
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன்.
*அமைதி, போரை விட மிகவும் கடினமானது.
*உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது.
*இயற்கை, ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது.
*கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை. *உடலை குணப்படுத்துவதற்கு முன், முதலில் மனதை குணப்படுத்த வேண்டும்.


