News April 21, 2025
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியின் இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால் ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
எல்லா நேரத்துலயும் அது முடியாது.. மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விவகாரங்களிலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதிட்டது. இதனையடுத்து, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லையென்றால், வேறு ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என SC தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News August 21, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தின் பல பகுதியில் காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் 24 மாவட்டங்களில் மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சேலம், க.குறிச்சி, தி.மலை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.
News August 21, 2025
Parenting: உங்க குழந்தை உயரமா வளரணுமா? இத கொடுங்க..

உங்கள் குழந்தை வயதுக்கேற்ற உயரத்துடன் வளரவில்லை என கவலையா? டாக்டர்கள் கூறும் இந்த பவுடரை வீட்டிலேயே அரைத்து கொடுத்து பாருங்கள். முதலில், ஆளி விதை, பாதாம், வால்நட்ஸ், பூசணி விதை & தேங்காயை ஒரு பாத்திரத்தில் வறுக்கவும்.
அதை நன்றாக அரைத்து, கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும்.
இதை தூங்குவதற்கு முன், பாலில் கலந்து கொடுக்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். SHARE.