News April 18, 2025
அரசு ஊழியர்களுக்கு போனஸ்.. அரசாணை வெளியீடு

30 ஆண்டுகளாக ஒரே அரசு பதவியில் இருப்பவர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல் அரசாணை வெளியாகியுள்ளது. TN நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், 1998ம் ஆண்டு அரசாணை, 2009, 2017ம் ஆண்டு அரசாணைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளர், பணியிட இடமாற்றம் மூலம் பதிவு எழுத்தர் நியமனத்தை துறந்தாலும் போனஸ் உயர்வு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
அனுராக் மன்னிப்பு.. ஆனால் ஒரு வரிக்காக மட்டும்தான்!

பிராமணர்கள் குறித்த தனது கருத்திற்கு அனுராக் காஷ்யப் மன்னிப்பு கேட்டுள்ளார். <<16140214>>பிராமணர்கள் <<>>மீது சிறுநீர் கழிப்பேன் என்ற அந்த ஒரு வரிக்காக மட்டுமே மன்னிப்பு கேட்பதாகவும், மொத்த பதிவுக்காக அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். தனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், ஆனால் கூறியதை திரும்ப பெற மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். ‘புலே’ படத்தை எதிர்க்கும் பிராமணர்களை அனுராக் சாடியிருந்தார்.
News April 19, 2025
போனில் சார்ஜ் ஓவரா காலியாகுதா? நச்சுனு ‘3’ டிப்ஸ்

போனில் சும்மா சும்மா சார்ஜ் குறைஞ்சா, இந்த சிம்பிள் டிப்ஸை யூஸ் பண்ணுங்க ★Always-On டிஸ்பிளேவை அணைத்து வைப்பது, சார்ஜ் குறைவதை தடுக்கும் ★Settings -> Battery Usage-ல், போனின் பேட்டரியை அதிகமாக உறிஞ்சும் App-களை கண்டறிந்து, அவற்றில் தேவையற்றதை Uninstall செய்யுங்கள் ★Location settings-ஐ சோஷியல் மீடியா, கேம்ஸ் போன்ற தேவையற்ற App-களுக்கு ஆப் செய்து வையுங்கள்.
News April 19, 2025
வங்கதேசத்தில் இந்து தலைவர் அடித்து கொலை

பங்களாதேஷ் பூஜா உத்ஜபான் பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பாபேஷ் சந்திரா ராய் (58) அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த அவரை சிலர் கடத்திச் சென்று கொலை செய்ததாக ராயின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த கொலை நிகழ்ந்துள்ளது.