News August 9, 2024

IPL அணியின் பயிற்சியாளராக இருக்க பாண்டிங் விருப்பம்

image

ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தேசிய அணிகளின் பயிற்சியாளராக இருந்தால், தன்னால் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிட முடியாமல் போய் விடும் என்ற அவர், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு வந்தால் அதை ஏற்க போவதில்லை என்றார். டெல்லி அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டுகள் இருந்த அவர், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News September 18, 2025

வாக்கு திருட்டுக்கு ECI உடந்தை: ராகுல் காந்தி

image

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.

News September 18, 2025

விஜய்யின் கொள்கை என்ன? H.ராஜா

image

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று விமர்சிக்கும் விஜய்யின் கொள்கை என்ன என H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தனது கொள்கைகளை பற்றி விஜய் பேசவில்லை என சாடிய அவர், தேசிய கட்சியான பாஜகவை எதிர்க்கும் தவெக தேச விரோத கட்சியா என்றும் கேட்டுள்ளார்.

News September 18, 2025

மருத்துவமனையில் காமெடி நடிகர்.. உதவி செய்த இபிஎஸ்

image

பிரபல காமெடி நடிகர் குண்டு கல்யாணம் கிட்னி பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு பண உதவி தேவை என செய்தி வெளியானது. இந்நிலையில், அவரின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்கும் என்று EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தகக்து.

error: Content is protected !!