News December 4, 2024
பத்திரப்பதிவு: நாளை கூடுதல் டோக்கன்

நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் வகையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150 (முன்பு 100), 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் (முன்பு 200) ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News November 12, 2025
போகும் போது எதையும் கொண்டு போக முடியாது..

நடிகர் அபிநய்யின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. உங்களிடம் பணம் இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். போகும் போது என்னங்க கொண்டுபோக போறோம். நம்மால் எதையும் எடுத்துட்டு போக முடியாது. ஒரு பானையில் ஒரு பிடி சாம்பலுடன் நமது வாழ்க்கை முடிந்துவிடும். அதனால், உயிருடன் இருக்கும் போது பிறருக்கு உதவுங்கள் என்று அவர் கூறுகிறார். உண்மையும் அதுதானே. #RIP
News November 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 12, ஐப்பசி 26 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶சிறப்பு: காலபைரவாஷ்டமி. ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.
News November 12, 2025
நேரடி வரி வருவாய் ₹12.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரையிலான, நேரடி வரி வருவாய் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி வருவாய் 7% அதிகரித்து ₹12.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.08 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ₹25.20 லட்சம் கோடியாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகமாகும்.


