News April 5, 2025
பத்திரப்பதிவு சலுகை: யார்-யாருக்கு பொருந்தும்?

ரூ.10 லட்சம் வரை சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் 1% கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. இது யாருக்கு பொருந்தும் என பார்க்கலாம். 1) சொத்தை வாங்குபவர் பெண்ணாக இருந்தால் சலுகை கிடைக்கும் 2) கூட்டாக பெண்கள் சேர்ந்து வாங்கினால் சலுகை கிடைக்கும் 3) நிலத்தை பிரித்து தனித்தனியே பெண்கள் பெயரில் பதிந்தாலும் சலுகை பொருந்தும் 4) ஒரே பெண் பெயரில் எத்தனை பத்திரப்பதிவு இருந்தாலும் பொருந்தும்.
Similar News
News November 26, 2025
5 விக்கெட்கள் காலி.. தடுமாறும் இந்தியா

549 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விக்கெட்களை இந்தியா இழந்து வருகிறது. குல்தீப் 5, கேப்டன் பண்ட் 13, ஜுரேல் 2 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியுள்ளனர். இந்திய அணி தற்போது 60/5 எடுத்துள்ளது. களத்தில் சுதர்சன் 8, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
News November 26, 2025
மாநிலங்களின் உரிமையை காக்க அனைத்தும் செய்வோம்: CM

இந்தியா, ஒரு சித்தாந்தத்திற்கோ கலாசாரத்திற்கோ சொந்தமானதல்ல, அது அனைவருக்கும் சொந்தம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அம்பேத்கரின் பார்வையை சுருக்க முயற்சிக்கும் சக்தியை எதிர்ப்போம் என்ற அவர், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியலமைப்பின்படி கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், மாநில உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்தையும் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News November 26, 2025
புயல் உருவானது.. கரையை கடக்கும் இடம் இதுதான்

மலாக்கா நீரிணையில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக IMD தெரிவித்துள்ளது. UAE பரிந்துரையின்படி ‘சென்யார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயலானது சுமத்ரா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 2,600 கிமீ தொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் IMD கூறியுள்ளது.


