News March 1, 2025
தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் வந்த மிரட்டலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்தில் தங்கியிருந்த விருந்தினர்கள், ஊழியர்களை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி செல்லும் போது முதல்வர் ஸ்டாலின், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இந்த இல்லத்தில் தான் தங்குவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 1, 2025
உச்சநீதிமன்றத்தை நாடிய சீமான்: மார்ச் 7ல் விசாரணை?

விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயலெட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
News March 1, 2025
கூட்டு சேர்ந்த அமெரிக்கா – ரஷ்யா

உலக அரங்கில் பரம எதிரிகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரே அணியில் நிற்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்த வரை, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பொருளுதவி செய்து வந்தார். தற்போது, பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப், இனி பொருளுதவி செய்ய முடியாது என்று சொல்லி போரை நிறுத்த சொல்கிறார். இதன்மூலம், அமெரிக்கா மறைமுகமாக ரஷ்யாவின் பக்கம் நிற்கிறது.
News March 1, 2025
எம் சாண்ட் விலை கடும் உயர்வு

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள எம் சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதால் TN முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் எம் சாண்ட் விலை உயர்த்தப்பட்டபோதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது TN முழுவதும் கட்டுமானத்திற்கான 1 யூனிட் எம் சாண்ட் விலை ₹3,500ல் இருந்து ₹4,500ஆக உயர்ந்துள்ளது.