News December 14, 2024

ஸ்கூலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 12 வயது மாணவரிடம் Enquiry

image

டெல்லி பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 வயது பள்ளி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கி, அவரின் பெற்றோருக்கு போலீசார் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதுவும் ஒன்று. முன்னர் வந்த வெடிகுண்டு எச்சரிக்கைகளில் யாரும் பிடிபடாததால், இவ்வாறு செய்ததாக மாணவர் தெரிவித்தார்.

Similar News

News August 13, 2025

ALERT: நைட் ஷிப்ட் வேலையில் இவ்வளவு ஆபத்தா!

image

நைட் ஷிப்ட் (அ) சுழற்சி ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய-ரத்தநாள நோய், புற்றுநோய், உடல்பருமன், நீரிழிவு (சர்க்கரை), மனச்சோர்வு, தீவிர ஜீரண கோளாறுகள், குழந்தையின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நைட் ஷிப்ட் பணியால் உடல் சோர்வு அடைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலை பாதிப்பு, விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

News August 13, 2025

திமுகவில் இணைகிறாரா தங்கமணி? பரபரப்பு அறிக்கை

image

EPS-ன் நம்பிக்கைக்குரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணையவிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, தனது உயிர் மூச்சு இருக்கும்வரை அதிமுகவில்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். தான் செத்தாலும் உடலில் அதிமுக கொடியைத் தான் போர்த்த வேண்டும் என அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

News August 13, 2025

இந்தியா பிடிவாதம் காட்டுகிறது: அமெரிக்கா

image

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா கொஞ்சம் பிடிவாதம் காட்டுவதாக அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் விமர்சித்துள்ளார். வரும் அக்டோபர் மாதமே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து
கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுத்ததாக கூறி, இந்திய பொருள்களுக்கு டிரம்ப் 50% வரிவிதித்திருந்தார்.

error: Content is protected !!