News April 19, 2025

புதுச்சேரி CM வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி CM ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் ரங்கசாமியின் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இறுதியில் அது புரளி என தெரியவந்ததையடுத்து போலீஸார் நிம்மதியடைந்தனர். இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Similar News

News October 16, 2025

சீனாவிற்கு உளவு பார்த்த இந்திய வம்சாவளி

image

சீனாவிற்கு உளவு பார்த்ததாக கூறி இந்திய வம்சாவளியும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியுமான ஆஷ்லே டெல்லிஸை (64) FBI கைது செய்துள்ளது. ரகசிய ஆவணங்களுடன், சீன அதிகாரிகளை சந்தித்ததாகவும், அவர்களிடம் இருந்து டெல்லிஸ் பரிசு பெற்றதாகவும் FBI அஃபிடவிட்டில் தெரிவித்துள்ளது. ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில், இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் டெல்லிஸ்.

News October 16, 2025

துணியில் விடாப்பிடியான கறையா? இதோ தீர்வு

image

துணியில் விடாப்பிடியான கறை ஒட்டியிருப்பதால், அணிவதற்கு சங்கடப்படுகிறீர்களா? வீட்டில் உள்ள சில எளிய பொருட்களை கொண்டே தீர்வு காணலாம். டீ, காபி, இங்க், சாஸ், லிப்ஸ்டிக் உள்ளிட்ட எந்த கறையாக இருந்தாலும் அவற்றுக்கு குட்பை சொல்ல முடியும். துணி துவைக்கும் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க..

News October 16, 2025

பிஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு செக் வைத்த பாஜக

image

பிஹாரில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் சதிஷ்குமார் யாதவ் என்பவரை பாஜக களமிறக்கியுள்ளது. கடந்த 2010 தேர்தலில் முன்னாள் முதல்வரும், தேஜஸ்வி யாதவ்வின் தாயாருமான ராப்ரி தேவியை இதே தொகுதியில் வைத்து, JDU சார்பில் போட்டியிட்டு தோற்கடித்தவர் தான் சதிஷ்குமார். இதனால், அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!