News August 4, 2024
நிதிஷ்குமார் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அலுவலகத்திற்கு அல்கொய்தா அமைப்பின் பெயரில் மிரட்டல் வந்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் அலுவலகம் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும், அதை சிறப்புப்படை போலீசாராலும் தடுக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரும், தீவிரவாத தடுப்புப்படையினரும் விசாரிக்கின்றன.
Similar News
News March 18, 2026
திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது

திமுக கூட்டணியில் வெளிப்படையாகவே மோதல் வெடித்துள்ளது. கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைவான இடங்களை பெற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பிலிருந்து தங்களிடம் சொன்னதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டதாகவும் CPM மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அதேபோல், <<19412554>>திருமாவும்<<>> தொகுதிகளை குறைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால், திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 18, 2026
அரசியல் தலைவர்கள் மக்களை குழப்புவது நியாயமா?

தவெகவுக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்ததாக <<19412409>>ஆதவ் அர்ஜுனா பேசியது<<>> அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. காரணம், கடந்த ஒரு வாரமாக தவெகவுடன், NDA தரப்பு பேசி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அதனை EPS, நயினார், CTR நிர்மல் குமார் மறுத்திருந்தனர். இப்படி இருக்கையில், ஆதவ் பேசியது பொய்யா? (அ) தலைவர்கள் உண்மையை மறைத்து மக்களை குழப்புவது நியாயமா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர். உங்கள் கருத்து?
News March 18, 2026
உதவிகேட்டு ஏமாற்றி விடுகிறார்கள்: GV பிரகாஷ்

கல்வி, மருத்துவ செலவுகளுக்காக SM-ல் யார் உதவி கேட்டாலும் உடனே பணம் அனுப்பி உதவும் பிரபலங்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். இதுகுறித்து தனது ‘Happy Raj’ பட நிகழ்ச்சியில் கேட்டபோது, உதவி கேட்டு தன்னை பலர் ஏமாற்றி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். உதவி கேட்டு SM-ல் வரும் மெசேஜ்களில் 90% சரியாக இருக்கும் என்றும், சிலர் ஏமாற்றி விடுகிறார்கள்; அதை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.


