News April 25, 2025
இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு, முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.
Similar News
News November 10, 2025
பில் கேட்ஸ் பொன்மொழிகள்

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *கடினமான வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில் ஒரு சோம்பேறி அதைச் செய்ய ஒரு எளிதான வழியைக் கண்டுபிடிப்பார். *நீங்கள் பெரும்பாலும் உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும்.
News November 10, 2025
இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட், சேது சூப்பர்ஃபாஸ்ட், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து மட்டுமே புறப்படும், எழும்பூர் செல்லாது. அதேபோல், அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம், எழும்பூர் வழியாக இயங்காது.
News November 10, 2025
விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP

திமுக கூட்டணி கட்சி MP-ஆன சு.வெங்கடேசன், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையாம், சினிமா தொடர்பான சந்திப்பாம். ‘வேள்பாரி’ நாவலை 3 பாகங்களாக ஷங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


