News February 24, 2025
டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 199 பயணிகள், 15 சிப்பந்திகளுடன் நியூயார்க்கில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் குண்டு இருப்பதாக இமெயிலில் மிரட்டல் வந்தது. இதனால், இத்தாலியின் 2 போர் விமானங்கள் துணையுடன், ரோமில் விமானம் தரையிறக்கப்பட்டது. இறுதியில் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.
Similar News
News February 24, 2025
போர் விமானங்கள் கிடைப்பதில் தாமதம்: அரசு எடுத்த ஆக்ஷன்

இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு, ஒரு மாதத்திற்குள் ஆய்வறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான HALயிடம், 2021ல் ஆர்டர் செய்த 83 போர் விமானங்கள் இன்னும் கிடைக்கவில்லை என விமானப்படை தளபதி AP சிங் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
News February 24, 2025
கோலியை புகழ்ந்து தள்ளிய PAK கேப்டன்

உலகமே கோலி ஃபார்மில் இல்லை எனக் கூறும்போது தான், அவர் சதம் அடித்துள்ளதாக PAK கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். கோலியின் கடின உழைப்பும், ஃபிட்னஸும் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று எனவும், அவரை அவுட்டாக்க கடினமாக முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பியதே தங்களின் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
News February 24, 2025
பரிசு தருவதாக கூறி 10ஆம் வகுப்பு மாணவி வன்கொடுமை

கரூர் கிருஷ்ணாபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பரிசு தருவதாக அழைத்து, 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. பெற்றோரிடம் தெரிவிப்பதாக கூறியதால் மாணவியின் கழுத்தை மாணவர்கள் அறுத்த கொடூரமும் நடந்துள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ள சிறுமி அளித்த தகவலின்படி ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.