News April 30, 2024
100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் உள்ள 100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட சென்னை மற்றும் ஓசூரில் உள்ள பல தனியார் மருத்துவமனை உட்பட 100 இடங்களிலும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
8 மாவட்டங்களில் நள்ளிரவு மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். நாளை(7.7.25) தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
News July 6, 2025
தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

பாஜகவுடனான கூட்டணி தற்காலிகமானதுதான் என அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா கூறியதற்கு <<16965259>>அண்ணாமலை கருத்து கூற மறுத்தது<<>> பேசுபொருளாகியுள்ளது. அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அண்ணாமலையின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?
News July 6, 2025
நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs