News September 6, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? மிரட்டியவர் கைது

மும்பையில் 1 கோடி மக்களை கொல்லும் வகையில் 34 இடங்களில் <<17621243>>வெடிகுண்டு <<>>வைத்துள்ளதாக கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவைச் சேர்ந்த அஸ்வின் குமார் (50), பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – ஜிகாதி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என கூறி, மும்பை போலீசாருக்கு வாட்ஸ்அப்பில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழும் அஸ்வின் குமார், ஒரு ஜோதிடர் ஆவார்.
Similar News
News April 2, 2026
BREAKING: மகளிருக்கு 1 பவுன் தங்கம்.. விஜய் வாக்குறுதி

தனது குடும்பத்தினருக்கு ஏதேனும் பிரச்னை வந்தால் டெல்லி செல்லும் ஸ்டாலின், TN-ல் நிலவும் கேஸ் தட்டுப்பாட்டை போக்க டெல்லி சென்று கோரிக்கை விடுக்காதது ஏன் என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பரப்புரை செய்த அவர், திருமணமாகும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கப்படும் என்றார். மேலும், மகளிருக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்குவோம் என உறுதி அளித்தார்.
News April 2, 2026
ஸ்டாலினுக்கு அடுத்து விஜய்.. லோக்பால் கருத்துக்கணிப்பு

லோக்பால் கருத்துக்கணிப்பின்படி, 181 – 189 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. 38 – 42 இடங்களில் அதிமுகவும், 8 – 10 இடங்களில் தவெகவும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கவனிக்கத்தக்க தலைவராக ஸ்டாலினுக்கு (41%) அடுத்தபடியாக விஜய் (27.1%) உருவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன? <<-se>>#TNElection2026<<>>
News April 2, 2026
பூக்கள் விலை பாதியாக குறைந்தது!

மதுரை, ஆண்டிபட்டி, குமரி தோவாளை சந்தைகளில் பூக்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ கிலோ ₹1,500 – ₹2,000 வரை விற்பனையான நிலையில், இன்று ₹700 ஆக குறைந்துள்ளது. பிச்சி, முல்லை தலா ₹500, செவ்வந்தி – ₹250, சம்பங்கி – ₹120, பட்டன் ரோஸ் – ₹150, அரளி – ₹350 என விற்பனையாகிறது. சுப முகூர்த்தம், கோயில் திருவிழா காலம் என்பதால் விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


