News August 13, 2024

உடலை வலுப்படுத்தும் கொள்ளு

image

கொள்ளு பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள சில பண்புகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. அதே போல இந்த பருப்பில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுவதன் மூலம், அடிக்கடி பசி எடுக்காமல் தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கொள்ளு இருக்கிறது.

Similar News

News March 10, 2026

கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில்

image

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக Indian Oil நிறுவனம் அறிவித்துள்ளது. வளைகுடா போரால் உலகளவில் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று எரிசக்திகளை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, வேலை நேரத்தை குறைக்க ஹோட்டல்கள் முடிவு எடுத்துள்ளன. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் சேவையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

News March 10, 2026

தேமுதிகவால் திமுக கூட்டணியில் அதிருப்தியா?

image

பல தேர்தல்களாக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு தொகுதிகளை குறைத்துவிட்டு, தேமுதிகவுக்கு அதிகமாக வழங்கியதால் திமுக மீது அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ’தேமுதிகவை நம்பி இவ்வளவு தொகுதிகளை கொடுக்குறீங்களே, அடுத்த எலெக்‌ஷனுக்கு NDA-வில் இணைந்துவிட்டால் என்ன செய்வது’ என கூட்டணி கட்சிகள் கேட்டதற்கு, தேமுதிக அப்படி செய்யாது என திமுக கேரண்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.

News March 10, 2026

ஐரோப்பிய நாடுகளுக்கு உதவத் தயார்: ரஷ்யா

image

போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீண்டகால ஒத்துழைப்பை வழங்கினால் எண்ணெய் அனுப்புவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!