News December 28, 2024
ஸ்பெயின் அருகே படகு விபத்து: பலி 69ஆக உயர்வு

ஸ்பெயின் அருகே நேரிட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு 80 பேருடன் படகு சென்றது. அந்தப் படகு நடுக்கடலில் கடந்த 19ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் மட்டுமே நீந்தி கரை சேர்ந்ததாகவும், எஞ்சியோர் இறந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் பலர் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
Similar News
News September 12, 2025
டெல்லியை புறக்கணிக்கிறாரா அண்ணாமலை?

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கும் அண்ணாமலை செல்லவில்லை. அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருந்ததால் போகவில்லை என விளக்கமும் கொடுத்திருந்தார். இது உள்கட்சி உரசலாக இருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
News September 12, 2025
பெண்களின் ஹார்மோன்.. இதை கட்டாயம் பாருங்க

பெண்களின் ஹார்மோன் சமநிலை, உடல், மன நலனுக்கு மிகவும் அவசியம். இதில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் மாதவிடாய் சுழற்சி, மனநிலை, தூக்கம், சருமம், முடி, உடல் எடையில் மாற்றங்கள் ஏற்படலாம். *ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதில் தூக்கத்தின் தரம் முக்கியமானது. *மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தலாம். *செர்ரிகள், ஆளி விதைகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். டேக் கேர் Sisters..
News September 12, 2025
பகல் 12 மணி வரை.. முக்கிய செய்திகள்

*15-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் <<17685622>>சி.பி.ராதாகிருஷ்ணன்<<>>.
*நாளை <<17684789>>மணிப்பூர்<<>> செல்கிறார் PM மோடி.
*வடை மடிக்கவே உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்: <<17684848>>EPS<<>> தாக்கு
*<<17685166>>தங்கம்<<>> விலை சவரனுக்கு ₹720 உயர்வு.
*USA-ல் <<17684579>>இந்தியர்<<>> வெட்டிக் கொலை. *‘லோகா’ படத்தால் ‘<<17683986>>காந்தா<<>>’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு.