News August 19, 2025
கொரோனா பாதித்தவர்களுக்கு இதயநோய் ரிஸ்க்: ஆய்வு

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரத்தநாளங்கள் முதுமையடையும் ஆபத்து அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் ரிஸ்க் அதிகரிக்கிறது. 16 நாடுகளை சேர்ந்த 2390 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இயல்பான வயதைவிட ரத்தநாளங்கள் 5 ஆண்டுகள் முதுமையடைவது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு, ஆண்களை விட பெண்களிடமும் அதிகம் இருப்பது உறுதியாகியுள்ளது.
Similar News
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு அவசர ஆலோசனை

சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்றிரவு அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். TN-ல் கையிருப்பில் உள்ள வீட்டு உபயோக, வணிக சிலிண்டர்களின் விவரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிகரீதியான கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு என ஹோட்டல் உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2026
தமிழக தேர்தல் தேதி… புதிய தகவல் வந்தது

புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை நேற்று ECI ஆய்வு செய்து முடித்துள்ளது. இதனால், மார்ச் 15-ம் தேதி தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை, மதுரை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
விடியல் தருவதாக கூறி விடியாத ஆட்சி: செல்லூர் ராஜு

அதிமுக கூட்டணி மீதான அச்சம் காரணமாகவே, ஸ்டாலின் ஊர் ஊராக மாநாடு நடத்துவதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். திருச்சியில் நேற்று நடந்த திமுகவின் மாநாட்டிற்கு 20 லட்சம் பேர் வந்ததாக கூறினர். ஆனால், 50,000 பேர் வந்தாலும் லட்சம் பேர் வந்ததாக கூறுவார்கள் என்றார். மேலும், 5 ஆண்டுகளாக விடியல் ஆட்சி தருவதாக கூறி விடியாத ஆட்சியை தந்ததோடு, அவர்கள் சேர்த்து வைத்த பணத்தில் மக்களை கூட்டுவதாகவும் சாடியுள்ளார்.


