News December 30, 2024
கருப்பு நிலா: இன்று இரவு வானில் நிகழும் அதிசயம்

நாளை அதிகாலை 3:57 மணிக்கு வானில் 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கருப்பு நிலா’ என்னும் அறிய சம்பவம் நிகழவுள்ளது. சந்திர சுழற்சி 29.5 நாள்கள். சில நேரங்களில் ஒரு மாதத்தில் 2 அமாவாசைகள் வரும். இந்த 2வது அமாவாசையை “Black Moon” என்பார்கள். இதனை பூமியிலிருந்து காணமுடியாது. ஆனால், அதன் தாக்கத்தால் நட்சத்திரங்கள், கோள்கள் நன்றாக இரவில் ஒளிரும் என்கிறார்கள்.
Similar News
News March 11, 2026
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி காயமா?

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, US தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஒரு டிவி சேனல் அவரை ‘ரமலானின் சான்பாஸ்’ (காயமடைந்த போர்வீரன்) என்று குறிப்பிட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபா புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர் தலைவர் தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News March 11, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு என CM சொல்வது பொய்: நயினார்

தமிழகம் உள்பட எங்குமே சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்றார். ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டதற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை; கேஸ் தேவைப்பட்டால் ஒரு கேஸ் டீலர் என்ற முறையில் தானே அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News March 11, 2026
ஹாஸ்பிடல்களில் விறகு அடுப்பு: மா.சுப்பிரமணியன்

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹாஸ்பிடல் கேண்டீன்களில் பாதிப்பில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாட்டின் மாற்று ஏற்பாடாக, அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் Induction Stove & விறகு அடுப்புகளை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


