News April 15, 2024
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதுதான் பாஜக வேலை

தேர்தலை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதுதான் பாஜகவின் வேலை என காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். புதுச்சேரி பரப்புரையில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் காங்., உறுதியாக உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூட கூறவில்லை. சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறியவே இந்த தேர்தல் நடைபெறுகிறது எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 13, 2025
மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 13, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FJ, கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், சாண்ட்ரா, கானா விநோத், வியானா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் ரம்யா ஜோ, சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளனர். வீட்டில் விதிகளை மீறிய விஜே பார்வதி, கம்ருதீனையும் விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
News December 13, 2025
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளா?

கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், கடந்த முறையை விட சுமார் 30 தொகுதிகள் கூடுதலாக கேட்டு பாஜக, டிமாண்ட் வைத்ததாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், 50 தொகுதிகள் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் EPS, 30 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். டெல்லிக்கு விரைந்துள்ள நயினார், அமித்ஷாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யவிருக்கிறாராம்.


