News March 15, 2025
பாஜகவின் எண்ணம் ஈடேறாது: ப.சிதம்பரம்

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதை போல், பாஜகவும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர விரும்புவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். ஆசைப்படுவதில் தவறில்லை, ஆனால் பாஜகவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி எத்தனை சதவீதம் உயர்கிறது என்பதை விட, எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 15, 2025
அவியல், கூட்டு போல வேளாண் பட்ஜெட்: இபிஎஸ்

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தும், விவசாயிகளுக்கு என்ன பலன் கிடைத்தது? என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் என்றும் சாடியுள்ளார். பல்வேறுத் துறைகளை ஒன்றிணைத்து அவியல், கூட்டு போன்று இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
தவெக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார்

TVKவில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் தென் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை அங்கீகரிக்கும் வகையில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சென்னையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது உயிர் பிரிந்தது. #RIP
News March 15, 2025
IS அமைப்பின் முக்கியத் தலைவரை காலி செய்த ஈராக்

ஈராக் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக நடத்திய தாக்குதலில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு கதீஜா கொல்லப்பட்டார். உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈராக் மற்றும் சிரியா தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடர்வதாக ஈராக் பிரதமர் முகமது சூடானி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.