News May 4, 2024

பாஜகவின் கனவு பலிக்காது

image

நாட்டு மக்களிடமிருந்து உண்மையை எவ்வளவு காலம் பிரதமர் மோடியால் மறைக்க முடியும் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மொரேனாவில் நடந்த பிரசாரத்தில் பேசிய அவர், பாஜகவினரின் பிரசாரம் உண்மையல்ல என்பதை மக்கள் அறிவர். பணவீக்கம், ஊழல், நிதி நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை இவைதான் பாஜக அரசின் 10 ஆண்டுகால சாதனை. இம்முறை பாஜகவின் கனவு பலிக்காது. ‘சத்யமேவ ஜெயதே’ உண்மையே வெல்லும்” எனக் கூறினார்.

Similar News

News February 17, 2026

இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க இவ்வளவு நேரமா..!

image

இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். மொத்தமாக, 2 மணிநேரம் 22 நிமிடங்கள் அவர் பட்ஜெட்டை வாசித்தார். இது கடந்தாண்டு அவர் வாசித்த முழு பட்ஜெட்டைவிட 16 நிமிடங்களே (2025-ல் 2 மணிநேரம் 38 நிமிடங்கள்) குறைவாகும். இந்நிலையில், இவ்வளவு நேரம் வாசித்தும் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பட்ஜெட்டிற்கு உங்கள் மார்க் என்ன?

News February 17, 2026

பிரபல நடிகர் காலமானார்.. குவியும் அஞ்சலி!

image

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டுவல்(95) வயது மூப்பின் காரணமாக காலமானார். உலக ரசிகர்களை கவர்ந்த ‘The Godfather’, ‘Apocalypse Now’, ‘To Kill a Mockingbird’ போன்ற மெகா ஹிட் படங்களில் ராபர்ட் நடித்துள்ளார். 1983-ம் ஆண்டு ‘Tender Mercies’ என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டுவல் வென்றிருந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News February 17, 2026

புதுச்சேரியிலும் கமலுக்கு டார்ச் லைட்!

image

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ‘டார்ச் லைட்‘ சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே திமுக கூட்டணியில் <<19136944>>கமல் 6 தொகுதிகள் கேட்பதாகவும்<<>>, டார்ச் லைட் சின்னத்திலேயே களமிறங்குவோம் என டிமாண்ட் வைத்ததாகவும் தகவல் வெளியானது; ஆனால், அறிவாலயம் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியிலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!