News June 18, 2024
பாஜகவின் பி டீம் அதிமுக: செல்வப்பெருந்தகை

இடைத்தேர்தலில் பாமக வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் பாமகவின் பி டீம் ஆக அதிமுக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எத்தகைய முயற்சி எடுத்தாலும், திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், திமுக-பாமக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் தீவிரமாக களப்பணியாற்றுமாறு அவரிடம் EPS அறிவுறுத்தியுள்ளாராம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த J கிருஷ்ணமூர்த்தியும் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார்.
News March 19, 2026
41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து.. அரசு அதிரடி

பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பார்லிமெண்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2025-ல் மட்டும் 41.41 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் போலி ரேஷன் கார்டுகள் களையெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
News March 19, 2026
விஜய்யுடன் கூட்டணி.. கடைசி நேர அரசியல் திருப்பம்

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியபின், அரசியல் களம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் NR காங்., கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், தங்கள் கூட்டணிக்கு வந்தால் தவெகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவோம் என NR காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரங்கசாமியுடன் புஸ்ஸி ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாராம்.


