News June 14, 2024
தேர்தல் அதிகாரிகளை மிரட்டி வென்றுள்ளது பாஜக: ராவத்

தோல்வியடைந்த 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி பாஜக வென்றுள்ளதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஜனநாயகத்தில் மக்கள்தான் கடவுள் என்றும், அந்தக் கடவுள் பாஜகவை பார்த்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். ராமர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 1, 2026
ரமலான் கொண்டாட்டங்களை புறக்கணிக்கும் முஸ்லிம்கள்

உலகம் முழுவதும் உள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து <<19272201>>இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் போராட்டம்<<>> வெடித்துள்ளது. கமேனியின் மறைவு காரணமாக, இந்தாண்டு ரமலான் பண்டிகையைக் கொண்டாட போவதில்லை என்று இந்தியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. தொழுகைகளில் கருப்பு பட்டையுடன் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 1, 2026
சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து.. உடனே இதை பாருங்க

அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவாக சிக்கன் உள்ளது. அடிக்கடி சிக்கன் சாப்பிட பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில், தினமும் சிக்கன் சாப்பிட்டால், அதிலுள்ள கலோரி, கொழுப்பினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வறுத்த சிக்கனில் இருக்கும் கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய பிரச்னை ஏற்படலாம். அதனால், அளவாக சிக்கன் சாப்பிடுவதே நல்லது.
News March 1, 2026
கடந்தாண்டை விட 8.1% எகிறிய ஜிஎஸ்டி வசூல்!

பிப்ரவரி மாத GST வசூல் 1.83 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தை விட 8.1% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டு மாதம் என்பதால் மார்ச் மாதத்தில் வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா ₹16,581 கோடி வசூலித்துள்ள நிலையில், தமிழகம் ₹6,811 கோடி GST வசூலித்துள்ளது.


