News May 14, 2024
தென்மாநிலங்களில் அதிக இடங்களில் பாஜக வெல்லும்

மக்களவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு, தென்மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், மொழி, சித்தாந்தத்துக்கு அப்பாற்பட்டு மோடியை தென்மாநில மக்கள் ஆதரிப்பதாகவும், ஆதலால் இந்தத் தேர்தலில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்

ஆட்சியில் பங்கு தருகிறோம் என அழைத்தும் யாரும் வராததால் விஜய் தனித்து விடப்பட்டார் என்று சீமான் கூறியுள்ளார். கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ தேவையில்லை என்ற அவர், தாங்கள் (நாதக) வீரர்கள், எனவே தனித்து நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாங்கள் மக்களை முழுமையாக நம்புவதாகவும், அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவுக்கு வாழ்த்து.. ரஜினி, கமலை சாடிய சின்மயி

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்கு கமல் & ரஜினி வாழ்த்து கூறியிருந்தனர். இந்நிலையில், கமலின் பதிவை டேக் செய்த சின்மயி, சினிமாவில் செல்வாக்குடன் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது பாலியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டோம் என தெரிவிக்கும் பெண்களை கண்டும் காணாமல் புறக்கணிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ‘அய்யோ புரியவே புரியாதா?’ என ரஜினிக்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.