News April 12, 2024
ராமர் கோயிலை பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்தாது

அயோத்தி கோயிலை பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்தாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உதம்பூர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ராமர் கோயிலை பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்தும் என காங்கிரஸ் தெரிவித்து வருவதாகவும், ஆனால் அதுபோல பாஜக செய்யாது என்றும் கூறினார். ஏனெனில், பாஜக தொடங்கப்படும் முன்னரே, ராமர் கோயில் விவகாரத்துக்கான போராட்டம் தொடங்கி விட்டதாக மோடி தெரிவித்தார்.
Similar News
News November 13, 2025
செங்கல்பட்டு: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News November 13, 2025
இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட தயார்: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குலுக்கு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக <<18263443>>அந்நாட்டு அரசு பேசி<<>> வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட பாக் தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அதேபோல் சாதாரண கேஸ் வெடிப்பை, வெளிநாட்டு சதி என்பது போல் இந்தியா கூறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
எனது இன்ஸ்பிரேஷன் அஜித்: துல்கர் சல்மான்

அஜித் இந்த வயதிலும் தனது பேஷனை நோக்கி பயணிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். அஜித்தின் ரேஸிங் வீடியோக்கள் தனக்கு பெரும் உத்வேகத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கு அஜித் பைக்கிலேயே சுற்றி வந்ததை பற்றி பெருமையாக பேசிய துல்கர், அவருக்கு பிடித்ததை தயக்கம் இன்றி செய்து வருவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


