News April 7, 2025
எந்த மதத்தையும் பாஜக விட்டு வைக்க போவதில்லை: உத்தவ்

வக்ஃப் திருத்த மசோதாவை அமல்படுத்திய பிறகு, பாஜக தற்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் இந்து கோவில்களின் நிலங்கள் மீதும் கண் வைத்துள்ளதாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். எந்த சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். பாஜகவின் அத்துமீறல்களை அனைவரும் கண்களை திறந்து பார்க்க வேண்டும் எனவும் உத்தவ் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 9, 2025
GPay, Paytm யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

UPI பரிவர்த்தனையின் தினசரி வரம்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி, NPCI-க்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், P2M பரிவர்த்தனை (தனிநபர் to வணிகர்கள்) செய்யும் பரிவர்த்தனையை ₹2 லட்சத்தில் இருந்து, ₹5 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. ஆனால், P2P பரிவர்த்தனை (தனிநபர் to தனிநபர்) வரம்பு அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது. நீங்க ஒரு நாளைக்கு UPI பரிவர்த்தனை எந்த அளவிற்கு செய்யுறீங்க?
News April 9, 2025
வேலையே செய்யவேண்டாம்.. ஒரு வருட சம்பளம் தருகிறோம்

வேலை செய்பவர்களுக்கே பல கம்பெனிகள் சம்பளம் சரியாக கொடுப்பதில்லை. ஆனால், கூகுள் நிறுவனம் தனது Ex-ஊழியர்களுக்கு 1 வருட சம்பளம் தருகிறதாம். AI துறையில் அதிகரிக்கும் போட்டியை சமாளிக்க, தங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் Ex-ஊழியர்களால், நிறுவனத்தின் தகவல்கள் கசிந்து விடாமல் இருக்க, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. உங்களுக்கு என்ன தோணுது?
News April 9, 2025
இந்தியாவிடம் வாலாட்டும் வங்கதேசம்! (1/2)

வங்கதேசத்தில் இருந்து பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், இந்தியாவின் உதவி அவசியம். ஏனெனில், கப்பலில் வந்திறங்கும் சரக்குகள், இந்திய தரை வழியாக கொண்டு செல்லப்பட்டே, விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதற்காக சரக்குகளை கையாளும் வசதியை இந்தியா, வங்கதேசத்துக்கு வழங்கியிருந்தது. ஆனால், திடீரென அந்த வசதியை ரத்து செய்திருக்கிறது இந்தியா. அதற்கு என்ன காரணம்? பார்க்கலாம்!