News April 11, 2025

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது: அமித் ஷா

image

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷாவிடம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கூறினார். தேர்தல் விவகாரத்தில் அதிமுக, பாஜகவும் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News

News April 18, 2025

ராகு-கேது பெயர்ச்சி: 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

image

மே மாதம் ராகு கிரகம் கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி இடப்பெயர்ச்சி ஆகின்றனர். சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி ஆவது மேஷம், மிதுனம், கடகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பண லாபம், முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம் என பல நல்ல விஷயங்கள் நடக்கலாம் என கூறுகின்றனர்.

News April 18, 2025

அன்றும் இன்றும் ஒரே கேப்டன்.. ஒரே தல..

image

இன்று உலகளவில் கொண்டாடப்படும் IPL 2008-ல் இதே நாளில் தான் தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. அன்று கேப்டனாக அறிமுகமான பலர் இன்று பயிற்சியாளர்களாகவும், கமெண்டேட்டர்களாகவும் மாறிவிட்டனர். அன்றும் இன்றும் கேப்டனாக இருப்பவர் தல தோனி மட்டுமே. 18 ஆண்டுகளாக சென்னை அணியை தோளில் சுமந்து வருகிறார் தோனி.

News April 18, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்

image

கோவையில் கல்லூரி மாணவிக்கு CEO பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி, அதே கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு படித்து வந்துள்ளார். அக்கல்லூரியின் CEO-வான பிரசன்னா, செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!