News October 2, 2025
விஜய்யை வைத்து பாஜக போடும் பிளான் இதுவே: திருமா

விஜய் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருப்பதாக திருமா சாடியுள்ளார். கொள்கை எதிரியாக அறிவித்தும், விஜய்யை பாதுகாக்க பாஜக வருவது சந்தேகத்தை எழுப்புவதாக கூறிய அவர், பாஜகவின் தூண்டுதலால் தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் எனவும், தனியாக நிற்கவைத்து வாக்குகளை பிரிப்பதே அவர்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
RSS நினைவு நாணயத்தை PM வெளியிடும் அவல நிலை:CM

CM ஸ்டாலின் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது <<17892666>>உருவ படத்திற்கு மரியாதை<<>> செலுத்தினார். பின்னர் அவர் பகிர்ந்துள்ள பதிவில், பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை காந்தி வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, PM அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 2, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

₹2,000 நோட்டுகளின் புழக்கம் 2023 மே 19-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போதுவரை ₹5,884 கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வரவில்லை என RBI தெரிவித்துள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT.
News October 2, 2025
பழங்கள் சாப்பிட்டதால் உயிரிழந்த பெண்

பழங்களை மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்த போலந்து நாட்டு பெண் உயிரிழந்துள்ளார். 27 வயதான கரோலினா க்ர்சிசாக், தனது 19 வயதில் இருந்து Fruitarian டயட் கடைபிடித்து வந்த நிலையில், உடல் எடை 22 கிலோவாக குறைந்து, எலும்புகள் தேய்மானம் ஆகி ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளார். எனவே, ஊட்டச்சத்து நிபுணர்கள், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் டயட் கடைபிடிக்க வேண்டாம். டயட் இருக்கும் நண்பர்களுக்கு இதை பகிரவும்!