News April 14, 2024
மக்கள் பிரச்னைகளை பாஜக விவாதிக்காது

நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்னைகளை விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்க மாட்டார்கள் என்றார். மேலும், காங்கிரஸின் கரங்களை வலுப்படுத்த இளைஞர்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
இந்தியச் சந்தைகள் ஏற்றம்; முதலீட்டாளர்கள் குஷி!

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்து 83,552 புள்ளிகளிலும், நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 25,606 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Asian Paints, Maruti Suzuki, Tata Motors, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
News October 17, 2025
இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் இதுதான்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பேரவை கூட்டத்தொடர்களில் சில வார்த்தைகளை நாம் கேட்டுக் கொண்டே இருப்போம். உதாரணமாக, மசோதா, விதி எண் 110, வெளிநடப்பு போன்றவை. இதுபோன்ற பேரவை வார்த்தைகளின் அர்த்தம் என்ன, அதன் மீதான நடவடிக்கைகள் என்னவென்பதை மேலே swipe செய்து பாருங்கள். இதனை அரசியல் பேசும் உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்னுங்க.
News October 17, 2025
BREAKING: தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2,400 உயர்ந்தது

தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹300 உயர்ந்து ₹12,200-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 அதிகரித்து சவரன் ₹97,600-க்கு விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தவரையில் இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹10,480(அக்.1 – அக்.17) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.