News April 30, 2024
பிரதமரின் வெறுப்புப் பேச்சால் பாஜக தோற்கும்

வெறுப்புப் பேச்சுகளைப் பிரதமர் மோடி பேசப் பேச பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் இந்திய மக்களுக்கு வாழ்வா? சாவா? என்று உள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவின் எதிர்காலமே மக்களவைத் தேர்தல் முடிவைப் பொறுத்து இருக்கிறது என்றார். மேலும், INDIA கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 28, 2026
அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்: மம்தா பானர்ஜி

அஜித் பவாரின் மறைவை சுட்டிக்காட்டி, அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். NDA-வில் இருந்த அஜித் பவார் வெளியேற இருந்த சூழலில் இந்த விபத்து நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், SC கண்காணிப்பில் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். SC தவிர்த்து வேறு எந்த அமைப்பின் மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.
News January 28, 2026
மாதம் ₹6000 வரை கிடைக்கும்

தீன் தயாள் உபாத்யாயா ஊரக திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வேலையில்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை முடித்து வேலையில் சேர்பவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம், 2 – 6 மாதங்களுக்கு ₹6,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. இதில் 15 – 35 வயதுடைய, 10-வது தேர்ச்சி பெற்ற கிராமபுற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். <
News January 28, 2026
நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒற்றை தமிழ் குரல்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பேசினார் CP ராதாகிருஷ்ணன். முன்னதாக தனது உரையை தமிழில் தொடங்கிய அவர், தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் நாம் அனுதினமும் வழிபடுகின்ற புனித பாரத அன்னையின் பொற்பாதங்களை வணங்குவதாக கூறினார். மேலும், ஜனநாயக நாட்டில் பல முரணான கருத்துகள் இருந்தாலும், சில விஷயங்களில் இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றார்.


