News August 16, 2025
எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: கார்கே

ஆட்சியில் தொடர எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடுமென கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். பிஹாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் யார் பலனடைகின்றனர் என்பது தெளிவாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும், மோசடிகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதற்கானது எனக் கூறினார்.
Similar News
News August 16, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17423028>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
பதில்கள்:
1. கேரளா
2. 1952
3. முளைக்குருத்து
4. பர்மா
5. விக்கல்
News August 16, 2025
இல.கணேசன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

மறைந்த நாகலாந்து கவர்னரும், மூத்த அரசியல் தலைவருமான இல.கணேசன் உடலுக்கு முதல்வர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரிடம் துக்கம் விசாரித்தார். அவரை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
News August 16, 2025
வடை சுடுவதில் PM சாதனை: CPM சண்முகம் தாக்கு

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் சிறப்புரையாற்றி இருந்தார் PM மோடி. இளைஞர்களுக்கான திட்டம், ஜிஎஸ்டி உள்பட 8 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், இவரது உரையை விமர்சித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்துள்ள PM மோடி, இம்முறை 103 நிமிடங்கள் பேசி அதிக வடைகளை சுட்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்