News April 8, 2024
வட இந்தியாவிலும் பாஜக மண்ணை கவ்வும்

வடக்கிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றிபெறும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பாசிச போக்கை தமிழ்நாடு, கேரள மக்கள் இணைந்து முறியடிப்பார்கள். இரண்டு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என்ற அவர், இந்த வெற்றி இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் என்றார். மேலும் பேசிய அவர், கூட்டணிக்கு யார் தலைவர், யார் பிரதமர் போன்ற கேள்விகள் தற்போதைக்கு அவசியமில்லாதது என்றும் தெரிவித்தார்.
Similar News
News January 19, 2026
3 மாடி வீடு, கார், 3 ஆட்டோ.. பிச்சைக்காரரின் சொத்து!

Beggar free இந்தூரை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் அதிகாரிகளை மங்கிலால் என்ற பிச்சைக்காரர் அதிர வைத்துள்ளார். அவருக்கு சொந்தமாக 3 மாடி வீடு & PMAY திட்டத்தின் கீழ் ஒரு 1 BHK ஃபிளாட், 3 ஆட்டோக்கள், டிரைவருடன் ஒரு Swift காரும் உள்ளதாம். ஆட்டோக்களை வாடகைக்கு விடுவதுடன், பணத்தை வட்டிக்கு கொடுத்தும் அவர் சம்பாதிக்கிறாராம். அதிகாரிகள் அவரின் முழு சொத்து விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 19, 2026
தனுஷ்-மிருணாள் திருமணமா? நண்பர் சொன்ன தகவல்

தனுஷ் – மிருணாள் திருமணம் பற்றிய தகவல் உண்மை இல்லை என தனுஷின் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பரும், இயக்குநருமான ஒருவர் தெரிவித்துள்ளார். தினமும் தன்னுடன் பேசும் தனுஷ் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை என்ற அவர், எப்படி யாரிடமும் சொல்லாமல் திருமணம் செய்வார் எனவும் கேட்டுள்ளார். அத்துடன், தனுஷுக்கு 2-வது திருமணத்தில் விருப்பமில்லை எனவும், மகன்களை வளர்ப்பதில் அவர் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
News January 19, 2026
தங்கம், வெள்ளி புதிய உச்சம்.. விலை ₹8,000 மாறியது

<<18894822>>தங்கம் <<>>போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ₹8,000 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹8 உயர்ந்து ₹318-க்கும், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹8,000 அதிகரித்து ₹3,18,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும்போதிலும் பலரும் வாங்கி குவிப்பதால், சென்னையின் பல்வேறு கடைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது.


