News April 25, 2024
பாஜக நமக்கு சவக்குழி தோண்டி புதைத்து விடும்

கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் தான்தோன்றித்தனமான ஒரு கொடுங்கோல் ஆட்சி நடந்தது என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர்,
பிரதமர் மோடிக்கு இன்னும் 5 ஆண்டுகள் நாட்டை ஆளும் வாய்ப்பைக் கொடுத்தால் சவக்குழி தோண்டி, நம்மைப் புதைத்து மூடிவிட்டுப் போய்விடுவார். மதத்தை வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள் மக்களைப் பற்றி எப்படிச் சிந்திப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News September 22, 2025
பாகிஸ்தான் எங்களுக்கு போட்டியே இல்லை..!

பாகிஸ்தான் அணி தங்களுக்கு போட்டியே இல்லை என்ற தொனியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசியுள்ளார். ‘என்னை பொறுத்தவரை, 2 அணிகளுக்கும் இடையே 7-7 (அ) 7-8 என்ற நிலையில் வெற்றி நிலவரம் இருந்தால் சம போட்டியாளர்கள் (RIVALRY), 13-0, 10-1 என இருந்தால் அது போட்டி அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆசிய கோப்பையில் IND vs PAK 21 முறை மோதியுள்ளன. IND 12, PAK 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளுக்கு முடிவில்லை.
News September 22, 2025
சூரிய கிரகணத்தை பாருங்க.. EXCLUSIVE PHOTOS

இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்துள்ளது. அதாவது, நேற்றிரவு 10.59 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 3.23 வரை நீடித்தது. இதனை இந்தியாவில் பார்க்க முடியாது என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் சூரிய கிரகணத்தை பார்த்தவர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து அதனை காணுங்கள்!
News September 22, 2025
Health Tips: மாதவிடாய் பிரச்னையா? இதோ தீர்வு

மாதவிடாய் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. இதில் முக்கியமான பிரச்னை மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதுதான். இதற்கு எளிய மருத்துவம் உள்ளது. 2 ஸ்பூன் கறிவேப்பிலை சாறு, அருகம்புல் சாறு தினமும் 3 வேளை சாப்பிட வேண்டும். 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர அதிக ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.