News April 10, 2025

ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் பாஜக: ராகுல் காந்தி

image

நாட்டில் ஜனநாயகத்தை பாஜக அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அகமதாபாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகின்றன என்றும் சாடினார். நாட்டு மக்களின் வரிப் பணத்தை எடுத்து தொழிலதிபர்கள் அம்பானி, அதானியிடம் கொடுக்க நினைப்பதாகவும் விமர்சித்தார்.

Similar News

News December 6, 2025

விஜய் தொகுதியில் போட்டியிடுவேன்.. அறிவித்தார்

image

2026 தேர்தலில் விஜய்க்கு எதிராக களம் காண்பேன் என NTK கொள்கைப்பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். விஜய் போட்டியிடும் தொகுதியின் விவரம் வெளியான பிறகு, தானும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு சீமானிடம் அவர் அனுமதி கேட்டுள்ளதாக NTK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காரணமாகவே, நேற்று வெளியான <<18478564>>NTK முதற்கட்ட வேட்பாளர்கள்<<>> பட்டியலில் அவரது பெயர் இல்லை என கூறப்படுகிறது.

News December 6, 2025

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர் அறிவித்தார்

image

சென்னையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிச.2-ல் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகள் செயல்படவுள்ளன. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிச.2-ல் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2025

புடினுக்கு PM மோடி அளித்த பரிசுகள்!

image

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த அதிபர் புடினுக்கு PM மோடி பல்வேறு பரிசுகளை அளித்துள்ளார். முதல் நாளில் பகவத் கீதையை பரிசளித்த PM மோடி, அடுத்ததாக பாரம்பரியம் கொண்ட பல்வேறு மாநிலப் பொருட்களை கொடுத்துள்ளார். இதில் மகாராஷ்டிராவின் தயாரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை, அசாம் டீ தூள், முர்ஷிதாபாத் டீ செட், மார்பிள் செஸ் செட், காஷ்மீர் குங்குமப்பூ உள்ளிட்டவை அடங்கும். போட்டோக்களை SWIPE செய்து பாருங்க..

error: Content is protected !!