News August 11, 2025

தேர்தல் வியூகத்தை கூர் தீட்டும் பாஜக

image

சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, கட்சிப் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் தேசிய பொதுச் செயலாளர் BL சந்தோஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் பாமக, தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதை பற்றியும் பேசப்பட்டுள்ளது. கடந்த கால கசப்​பு​களை மறந்து அதி​முக – பாஜக கூட்​ட​ணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல உழைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. OPS-ஐ சமாதானம் செய்யவும் பாஜக முயற்சிக்கிறதாம்.

Similar News

News August 11, 2025

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் CM ஸ்டாலின்

image

முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு CM ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இம்மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களை சந்திப்பதுடன் தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

News August 11, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

1. தமிழ் எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
2. சூரியனில் எந்த வாயு அதிகமாக உள்ளது?
3. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
4. மனித உடலில் எந்த உறுப்பு, வெப்பநிலை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது?
5. உங்களுக்கு சொந்தமானது, ஆனால் பிறர் அதிகமாக பயன்படுத்துவார்கள்.. அது என்ன? பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 11, 2025

கமலை விட அதிகமாக கெட்டப் போடும் லோகி!

image

லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால், அவரையே மிஞ்சும் அளவிற்கு நிஜ வாழ்வில் பல கெட்டப்பை போட்டு வருகிறார். ‘கூலி’ பட நிகழ்ச்சியில் நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்ட அவர், தற்போது தனது மீசையை ஷேவ் செய்து விட்டார். இந்த கெட்டப்பில் அவரை பார்த்த நெட்டிசன்கள், இது முகமது லோகி என கமெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் விரைவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

error: Content is protected !!