News December 30, 2024
ஜனவரியில் பாஜகவுக்கு புதிய தலைவர்

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் ஜனவரி மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஜே.பி.நட்டா தற்போது அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே இவரது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மேலிடம். இந்நிலையில் ஜனவரி மாதத்தில், புதிய தலைவர் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
Similar News
News March 8, 2026
இந்திரா காந்தி பொன்மொழிகள்!

*எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை. *துணிச்சலின் நல்லொழுக்கம், மன்னிப்பு. *ஒருவர் பேசுவதை முழுதாக கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள். *தம் உரிமைகளை கோருபவர்கள் என்றும், தம் கடைமைகளை மறக்கக்கூடாது. *விருப்பம் இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.
News March 8, 2026
கோடிக்கணக்கில் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்கா, தற்போது ஆயுத விற்பனையை தொடங்கியுள்ளது. அதன்படி ₹1,290 கோடி மதிப்புடைய ஆயத விற்பனையை செய்ய தனது அவசர அதிகாரத்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் தலா 1,000 பவுண்டுகள் எடையுள்ள 12,000 குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளது அமெரிக்கா. அத்துடன் முக்கிய தொழில்நுட்ப சேவைகளும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட உள்ளது.
News March 8, 2026
இலவசம் என்பது வளர்ச்சியல்ல, அது வீழ்ச்சி: சீமான்

இதுவரை இருக்கின்ற அரசியல் கோட்பாடு, நிலைபாட்டில் முற்றிலுமாக தங்கள் கட்சியின் கோட்பாடு மாறுபட்டது என சீமான் பேசியுள்ளார். புதுச்சேரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அனைத்துக்கும் இலவசம் அறிவிக்கிறார்கள். இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சி திட்டம். கவர்ச்சி திட்டம் என்றார். இலவசம் பெற வேண்டிய வறுமை இன்றி மக்களை உயர்த்துவதே தமது கடமை எனவும் தெரிவித்தார்.


