News January 3, 2025

தடையை மீறி போராடவிருக்கும் பாஜக

image

அண்ணா பல்கலைக்கழைக வன்கொடுமையை எதிர்த்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக பாஜக அறிவித்திருந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருக்கும் நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னையில் போராடிய அதிமுக, பாமக, நாதக ஆகியோர் கைதான நிலையில், இன்று பாஜகவினர் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 27, 2025

தங்க நகை: இப்படியொரு கட்டுப்பாடா?

image

கல்யாண வீடுகள்ல பெண்கள் நிறைய தங்க நகைகள் அணிவதற்கு இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி அணியலாம். ஆனால் ஆடம்பரமாக அதிக அளவு நகைகள் போட்டுட்டு வந்தா ₹50 ஆயிரம் ஃபைன். ஏன் தெரியுமா? பணக்காரங்கள பார்த்து ஏழைகளும் நகைகள் சேர்க்க கடன் வாங்கி சிரமப்படுவதால இப்படி ஒரு கட்டுப்பாடாம். உத்தராகண்ட்ல இருக்குற இந்த கந்​தார் கிராமத்த இந்தியாவே வியந்து பாக்குது.

News October 27, 2025

சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில், அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சுயதொழில், சொந்த வீடு, கடன் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகவும் பெறுகிறார்.

News October 27, 2025

CM பதவியை தக்கவைக்க அமைச்சரவையில் மாற்றம்

image

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, நவ.20 உடன் சித்தராமையா CM ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பதவியை விட விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நவ.15-ல் டெல்லி மேலிடத்தை சந்திக்கிறார்.

error: Content is protected !!