News November 23, 2024
விதர்பாவை கைப்பற்றும் பாஜக

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் விவசாயம் சார்ந்த விதர்பா பகுதியின் வெற்றி மிக முக்கியமானது. பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் இங்கு பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆனால், இம்முறை மீண்டு வந்து மொத்தமுள்ள 62 தொகுதிகளில் சுமார் 40 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. விதர்பாவுடன் மேற்கு மஹாராஷ்டிரமும் கைக்குள் வந்தால் பாஜக வெற்றி உறுதியாகிவிடும்.
Similar News
News November 21, 2025
BREAKING: அதிமுக எம்எல்ஏ கொலை.. பரபரப்பு தீர்ப்பு

2005-ல் கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கும்பலில் 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விவரம் நவ.24-ல் தெரிவிக்கப்படும் என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமாகும்.
News November 21, 2025
ஆன்மிக செல்வந்தர்களாக இருக்க வேண்டும்: AR ரஹ்மான்

உங்கள் ஈகோ போய்விட்டால், நீங்கள் கடவுளை போல வெளிப்படையானவராக மாறுகிறீர்கள் என AR ரஹ்மான் கூறியுள்ளார். சூஃபியிசம் பற்றி பேசிய அவர், உங்களின் சுயத்தை மறைக்கும் காமம், பேராசை, பொறாமை, முன்முடிவு என அனைத்தும் இறக்க வேண்டும் என்றார். நாம் அனைவரும் ஆன்மிக ரீதியாக செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்ற ரஹ்மான், ஆன்மிக செல்வம் வரும்போது, பொருள் செல்வம் பின்தொடரும் என்றும் கூறினார்.
News November 21, 2025
இந்திய போர் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு

துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்ததாக IAF அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமானியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் IAF தெரிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. துபாயில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


