News April 4, 2024

தாம்ப்ராஸ் அமைப்பு பாஜகவுக்கு ஆதரவு

image

வரும் தேர்தலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் நாராயணன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர்களது பொதுக்குழு உறுப்பினர்களிடம் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் அதில் 99% பேர் பாஜகவுக்கு ஆதரவளிக்க சொன்னதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார். மோடியின் ஆட்சியில் இந்தியா வல்லரசாக திகழும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News

News January 12, 2026

மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News January 12, 2026

கட்டண கொள்ளைக்கு துணை போகும் திமுக: அன்புமணி

image

பொங்கல் திருநாளையொட்டி ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை திமுக அரசு தடுக்கத் தவறியதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆம்னி பஸ்கள் மதுரைக்கு ₹3,500, நெல்லைக்கு ₹4,200 வரை கட்டணம் வசூலிப்பதாகவும், ஆனால் இதனை தடுக்காமல், மக்களை சுரண்டுவதற்கு திமுக துணைபோவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக அரசுக்கு மனசாட்சி இருந்தால் ஆம்னி பேருந்து கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

News January 12, 2026

பிரபல நடிகர் காலமானார்… REASON!

image

பிரபல பாடகரும் நடிகருமான பிரஷாந்த் தமாங்(43) <<18826872>>மரணத்துக்கான<<>> காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஆக்டிவாகவே இருந்த பிரஷாந்த், உறக்கத்தில் இருந்து காலையில் விழிக்கவே இல்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். பதறிப்போய் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இளம்வயது மாரடைப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.#RIP

error: Content is protected !!