News May 16, 2024
பிற கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு பாஜக சீட்

பல்வேறு கட்சியிலிருந்து வந்த 106 பேருக்கு, தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 435 இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சி என்ற சிறப்பை தற்போது அக்கட்சி பெற்றுள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 74 வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 326 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
Similar News
News December 9, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(56). இவர் அந்த பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை காரணமாக வஞ்சிபாளையம் சோமனூர் இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 9, 2025
இதெல்லாம் பண்றீங்களா? கிட்னிக்கு பேராபத்து!

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் உள்பட அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.
News December 9, 2025
அயோத்தியிலும் இதைத்தான் செய்தனர்: RS பாரதி

திருப்பரங்குன்றத்தில், வெளியில் இருந்து சென்றவர்களே கலவரம் செய்ய முயன்றதாக RS பாரதி தெரிவித்துள்ளார். அயோத்தியிலும், அத்வானி ரத யாத்திரை மேற்கொண்ட பிறகே கலவரம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அதிமுகவை 4 ஆகவும், பாமகவை 2 ஆகவும் பாஜக பிரித்துள்ளது என்ற அவர், திமுகவை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார். ED, CBI, ECI ஆகியவற்றை வைத்து ஏதாவது செய்துவிடலாம் என பாஜக முயற்சிப்பதாகவும் சாடினார்.


