News April 9, 2024
தமிழ் கலாசாரத்திற்கு பாஜக மரியாதை அளிக்கிறது

தமிழ் கலாசாரத்திற்கு பாஜக என்றும் மரியாதை அளிக்கிறது என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வாகனப் பேரணியில் கலந்துகொண்டது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு NDA கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த நகரத்திற்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 24, 2025
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு

5 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் பாமாயில் இறக்குமதி உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப்பங்கு அதிகரித்ததால் வீழ்ச்சியடைந்த பாமாயில் இறக்குமதி, வருகிற ஜூலை – செப்டம்பரில் 7 லட்சம் டன் அதிகரிக்கும் என எண்ணெய் டீலர்கள் கூறுகின்றனர். தற்போது சோயாபீன் எண்ணெய் விலையை விட பாமாயில் விலை குறைந்ததால், அதன் தேவை அதிகரித்துள்ளதும் இறக்குமதி உயர்வுக்கு காரணம்.
News April 24, 2025
பஹல்காம் விவகாரத்தில் இந்தியாவின் அடுத்த பதிலடி!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் J&K காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. உதம்பூர் பசந்த்கரில் இன்று காலை நடத்தப்பட்ட என்கவுன்டரில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
News April 24, 2025
‘மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ விண்ணப்பம் தொடங்கியது!

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் 2025-2026 கல்வியாண்டில் முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ₹354-ஐ ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். மேலும், யூனிவர்சிட்டியில் வழங்கப்படும் படிப்புகள், கட்டண விவரங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள <