News April 19, 2025
பாஜக குலத்தொழிலை ஊக்குவிக்கிறது: CM விமர்சனம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினைத் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கிறது என விமர்சித்தார். எனவே தான், சாதி பாகுபாடு இல்லாத வகையில் கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கலைஞர் கைவினைத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
Similar News
News November 17, 2025
ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் 500% வரி: டிரம்ப்

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 500% வரி விதிக்கும் செனட் மசோதாவை ஆதரிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் போருக்கு கிடைக்கும் நிதியுதவியை குறைக்க, அந்நாட்டுடன் வணிகம் மேற்கொள்ளும் பிற நாடுகளுக்கு இதுபோன்ற வரிவிதிப்புகள் வழிவகுக்கும் என ஏற்கெனவே டிரம்ப் கூறியிருந்தார். முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி, இந்தியாவுக்கு 50% வரியை USA விதித்தது.
News November 17, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹10,000 குறைந்தது

தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹173-க்கும், கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,73,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹10,000 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 17, 2025
2,623 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்: APPLY

ONGC-ல் காலியாகவுள்ள 2,623 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18- 24. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, டிகிரி. தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு. உதவித்தொகை: ₹8,200- ₹12,300 விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


