News April 16, 2025
பாஜக தலைவர் பொறுப்பேற்பு

தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
Similar News
News January 4, 2026
₹100 கோடி வசூலுடன் நிவின் பாலியின் மாஸ் கம்பேக்!

‘பிரேமம்’ மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நிவின் பாலி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தன. இந்நிலையில், அகில் சத்யன் இயக்கிய ‘சர்வம் மாயா’ படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் நிவின்!
மோகன்லாலின் ‘விருஷபா’ படத்துடன், கடந்த 25-ம் தேதி ரிலீசான இந்த திரைப்படம், 10 நாள்களில் ₹100 கோடி வசூலை குவித்து அசத்தியுள்ளது.
News January 4, 2026
திமுக முக்கிய தலைவர் காலமானார்: ஸ்டாலின் இரங்கல்

2 முறை MP, 2 முறை MLA பதவிகளில் இருந்த திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசன் காலமானார். இந்நிலையில், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பை பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
News January 4, 2026
உங்கள் உடலில் சிறிய எலும்பு எது தெரியுமா?

★வளர்ந்த மனிதரின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன ★10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பு செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன ★பாதங்களில் 26, கைகளில் (மணிக்கட்டுகள் உள்பட) 54 எலும்புகள் உள்ளன ★மிக நீளமான, மிக வலுவான எலும்பு தொடை எலும்பு (femur) ★உடலின் மிகச்சிறிய எலும்பு, காதில் உள்ள ‘ஸ்டேப்ஸ்’ எலும்பு ★மற்றொரு எலும்புடன் தொடர்பில்லாத ஒரே எலும்பு நாக்கின் அடியில் காணப்படும் V வடிவ hyoid எலும்பு.


