News April 16, 2024
பாஜக தலைவர் ஓபிஎஸ்; கிண்டலடித்த ஜெயக்குமார்

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் வருவார்கள். அதிமுகவில் இடமில்லாத நிலையில் பாஜக தான் அவர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்ற அவர், அண்ணாமலையின் கதையை தேர்தலுக்கு பிறகு பாஜக முடித்து வெளியே அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
மதுரை: 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

மதுரை முடக்கத்தான் கோவிந்தராஜ் 40 எலக்ட்ரீசியன் இவருக்கும் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார், மனவேதனை அடைந்த கோபிராஜ் தனது 10 வயது 5 வயது மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்தார், பின்னர் கோபிராஜ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இரவு 8:30 மணிக்கு கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News November 23, 2025
Thalaivar 173-ல் சுந்தர் சி-க்கு பதிலாக இவரா?

தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதையடுத்து இயக்குநரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினியையும் கமலையும் சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம்குமார் சொன்ன கதை பிடித்திருப்பதாகவும், அவரே தலைவர் 173-ஐ இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
News November 23, 2025
மக்களை சந்திக்க புறப்பட்டார் விஜய்

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தவெக தலைவர் விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். விஜய் வருகையையொட்டி, தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குழுவினர், பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஜேப்பியார் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


