News March 22, 2025

பாஜக பீஸ் போன பல்ப்: சேகர்பாபு

image

ஊழலை மறைக்க சிலர் (திமுக) மொழியின் பெயரால் அரசியல் செய்கின்றனர் என்று அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். பாஜக என்பது பியூஸ் போன பல்பு; அது ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும் அதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிய அவர், திமுகவை மிரட்டி பார்ப்பதுபோல அமித்ஷா பேசுகிறார். அவரின் மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்றார்.

Similar News

News March 24, 2025

விஜய்க்கு பவன் கல்யாண் கொடுத்த அட்வைஸ்

image

ஒரு நடிகர் உடனடியாக முதல்வராகி விட முடியாது என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், NTR-க்கு நடந்தது போல எல்லாருக்கும் நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அரசியல் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் என்றும் முதலில் நிலைத்து நிற்க வேண்டும் என்றும் கூறினார். விஜய்க்கு அனுபவம் உள்ளது. நான் சொல்ல ஒன்றும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

News March 24, 2025

பள்ளி வாகனம் விபத்து. மாணவன் பலி

image

கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் பெண்ணும், மாணவன் அர்னீஷும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2 மாணவர்கள் படுகாயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பிரேக் அடித்ததால் விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தப்பியோடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 24, 2025

அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

image

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த உரையின் முடிவில் “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தையும் முதல்வர் முன் வைத்தார்.

error: Content is protected !!