News December 21, 2024
அம்பேத்கரின் பவரை பாஜக உணர்ந்திருக்கும்: பா.ரஞ்சித்

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அவரது பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை பாஜக இப்போது உணர்ந்திருக்கும். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய வேண்டிய நேரம் இது” என்றார்.
Similar News
News September 3, 2025
மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் மணத்தக்காளி கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,
➤மணத்தக்காளி பழங்களை உலர வைத்து வற்றலாக சாப்பிட்டால், காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.
➤மணத்தக்காளி இலைச் சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் மறையும்.
➤மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவை நீங்கும். SHARE IT.
News September 3, 2025
SBI வாடிக்கையாளர்களுக்கு வந்தது எச்சரிக்கை

SBI வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Whatsapp-ல் உங்களின் YONO கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக போலியான APP லிங்கை அனுப்புகின்றனர். அதனை கிளிக் செய்தால் பணம் திருடப்படுகிறது. எனவே, SBI வங்கி வாடிக்கையாளர்கள், internet மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
விஜய்யின் மாநாட்டை தாக்கி பேசிய வசந்த பாலன்

தவெகவின் மாநாடு குறித்து அரசியல் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தாலும், திரைத்துறையில் யாரும் பெரிதாக வாய்திறக்கவில்லை. ஆனால், இப்போது மறைமுகமாக இயக்குநர் வசந்தபாலன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது, சமீபத்தில் தான் பார்த்த ஒரு அரசியல் மாநாட்டில் இளைஞர்கள் அரசியல்படுத்தப்படாமல், வெயிலில் கருகி, மேடையில் இருந்து தூக்கி வீசப்பட்டது கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.