News March 19, 2024

பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா கைது

image

மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக MP தேஜஸ்வி சூர்யாவை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். நாகர்ட்பேட் பகுதியில், இஸ்லாமியர்கள் நமாஸ் செய்தபோது, மொபைல் கடைக்காரர் முகேஷ் என்பவர் அனுமன் பாடலை இசைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முகேஷ் தாக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து தேஜஸ்வி உள்ளிட்டோர் பேரணி சென்றனர். அப்போது தேர்தல் விதிகளை மீறி மத வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News February 17, 2026

இன்று சூரிய கிரகணம்.. மறந்தும் இதை செய்யாதீங்க

image

2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 3:26 மணிக்கு தொடங்கி இரவு 7:57 மணி வரை நீடிக்கவுள்ளது. இந்த கிரகணத்தின் போது, சில காரியங்களை செய்யக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர் *சூரியனை நேராக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் *கிரகணத்தின் போது செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், கிரகணத்திற்கு முன்பாக குறைவாக சாப்பிடுவது நல்லது *கிரகண நாள்களில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்லக் கூடாதாம்.

News February 17, 2026

FLASH: இனி மாதம் ₹5,000.. பட்ஜெட்டில் அறிவிப்பு

image

இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உலமாக்களின் மாதாந்திர உதவித்தொகை ₹3,000-ல் இருந்து ₹5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையின மாணவர்கள் 90,733 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

News February 17, 2026

வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்கவை இதோ..!

image

*தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் போடப்பட்டு ₹1,94,076 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. *பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக, விவசாயிகளுக்கு இதுவரை ₹2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. *விவசாயிகளிடம் இருந்து 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. *2 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!