News October 19, 2025
லோக்சபாவில் கரூர் சம்பவத்தை கையில் எடுக்கும் பாஜக MP

கரூர் விவகாரம், வரும் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்க உள்ளது. பாஜக MP ஹேமமாலினி விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவை கடுமையாக விமர்சித்து பேச உள்ளாராம். மேலும், அவர் தமிழில் பேச உள்ளதுதான் ஹைலைட்டாம். அவருக்கு கவுண்டர் கொடுக்க காங்., தரப்பில் ஜோதிமணி தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக, சிபிஐ விசாரணை செய்யும் வழக்கு குறித்து விவாதிக்க கூடாது. ஆனால், பொதுவாக பேசலாம் என்பதால் சம்பவம் உறுதியாம்.
Similar News
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு!

அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. TN-ல் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்க சென்னை HC சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.