News June 15, 2024
இந்திரா காந்தியை புகழ்ந்த பாஜக அமைச்சர்

மலையாள நடிகர் சுரேஷ் கோபி, மத்திய அமைச்சராகியுள்ளார். இதையடுத்து மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கருணாகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திரா காந்தியை இந்தியாவின் தாய் என்றும், கருணாகரன் மற்றும் இடதுசாரி மூத்த தலைவர் ஈ.கே. நாயனாரை தமது அரசியல் குரு என்றும் புகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 13, 2025
தி.மலை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 13, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று(நவ.13) ஒரே அடியாக ₹1,600 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹94,440-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ₹94,000 தாண்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 13, 2025
பாக்., ராணுவ தளபதிக்கு உச்சபட்ச அதிகாரம்

ராணுவத்துக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன 27-வது சட்டத்திருத்தம் பாக்., நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதித்துறை முதல் அணு ஆயுதம் வரை பாக்.,கின் உச்சபட்ச அதிகாரங்கள் அனைத்தும் ராணுவ தளபதி கட்டுபாட்டில் வந்தது. பிரதமர் & அதிபர் பதவிகள் இனி அலங்கார பதவிகளாக மட்டும் நீடிக்கும். மேலும், பாக்., சுப்ரீம் கோர்ட் இனி சிவில், குற்ற வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும்.


