News January 3, 2025
இன்று கைதாகும் பாஜகவினர்

தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் அறிவித்துள்ளதால் மதுரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிர் அணி இன்று மதுரையில் போராட்டம் நடத்தவுள்ளது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருக்கும் நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பாமக, அதிமுக, நாதக இதுபோல் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News September 12, 2025
பிக்பாஸ் சீசன் 9: முதல் எபிசோட் எப்போது?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் 5-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி விஜய் சேதுபதி புதிதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு சுற்றி காட்டுவார் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு அக்.5 ஞாயிறு அன்று கூமாபட்டி தங்கபாண்டியன், பால சரவணன், சதீஷ் கிருஷ்ணன், ஷபானா, உமர், உட்பட 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்ல இருக்கின்றனராம்.
News September 12, 2025
50 வயதை தொட்ட ஆண்களுக்கு எச்சரிக்கை

ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று புராஸ்டேட் கேன்சர். இதன் அறிகுறிகளை முன்பே அறிந்து சிகிச்சை எடுத்தால் பிழைக்கும் வாய்ப்பு 95% வரை இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதன் முக்கிய அறிகுறிகள்: 1) உடனே, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, *சிறுநீர் வெளியேற்றம் மெதுவாக இருப்பது *எலும்புகளில் வலி *விறைப்புத்தன்மை குறைதல். தேவையானவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News September 12, 2025
ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு அதிர்ச்சி

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை தழுவியது. Hangzhou-ல் நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 4வது, 31வது, 47வது, 56வது நிமிடங்களில் அந்த அணி வீராங்கனைகள் கோல் அடித்தனர். இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடிக்க 4-1 என்ற கணக்கில் சீனா வெற்றியடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமானால் நாளை ஜப்பான் அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.